ஏழு மொழிகளில் காந்தியின் கையொப்பம்

எழுத்தறிவு என்பதே கல்வியின் சாதாரண பொருள். இது ஒரு கருவி மாத்திரமே. ஒரு கருவியை நல்வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழியிலும்உபயோகிக்கலாம். எழுத்தறிவும் அப்படியே ஆகலாம்.

கல்வியை பலர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும், மிகச் சிலரே நல்வழியில் உபயோகிக்கின்றனர் என்பதையும் நாம் தினமும் காண்கிறோம். இதனால்,நன்மையை விட தீமையே அதிகம் செய்யப்பட்டிருக்கிறது.

கல்வியறிவு இல்லாத ஒரு விவசாயி யோக்கியமாக சம்பாதித்து பிழைக்கிறார். உலகத்தைப் பற்றிய சாதாரண ஞானமே அவருக்கு உண்டு. தன்னுடையபெற்றோர்கள், தன் மனைவி, குழந்தைகள், கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிகிறது.ஒழுக்க நியதிகளை அறிவதோடு அதனை அனுசரிக்கவும் செய்கிறார்.

ஆனால், தன் பெயரைக் கூட அவருக்கு எழுத தெரியாது. அவருக்கு எழுத்தறிவை அளித்து அவரது இன்பத்தை கொஞ்சமாவது அதிகரித்து விட முடியுமாஎன்றால் முடியாது. மாறாக, அவரது நிலை குறித்தும், குடிசை குறித்தும் அதிருப்தியைதான் ஏற்படுத்த முடியும். இதற்கு அவருக்கு எதற்கு கல்வி?

நாம் மேனாட்டு சிந்தனை வெள்ளத்தில் மிதப்பதால் எது அனுகூலம், எது பிரதிகூலம் என்பதை கூட சீர்தூக்கி பார்க்க முடியாத கல்வியை கற்கிறோம், கற்றுக்கொடுக்கிறோம்.

ஆகையால் ஆரம்பக்கல்வியும், மேல்படிப்பும் முக்கியமான காரியத்தை செய்வதற்கு வேண்டியதே இல்லை. இவை நம்மை மனிதர்கள் ஆக்குவதில்லை. நாம்நம் கடமையைச் செய்வதற்கு உதவியாக இல்லை.

நீங்களும் நானும் பொய்யானதொரு படிப்பின் தீமையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அத்தீமையில் இருந்து நான் விடுபட்டு விட்டதாக கூறிக் கொள்கிறேன்.என்னுடைய அனுபவத்தின் பலனை உங்களுக்கு அளிக்க முயற்சி செய்வதோடு, இதற்காக இப்படிப்பின் ஊழலையும் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

கல்வியை நாம் பிரமாதப்படுத்தக் கூடாது என்று சொல்கிறேனே ஒழிய, எல்லா சந்தர்ப்பங்களிலும் கூடாது என்று சொல்லவில்லை. கல்வி காமதேனு அன்று.கல்வி விசயத்தில் கல்வி பயன் உள்ளதாய் இருக்கக்கூடும்.

நம் உணர்ச்சிகளை அடக்கி, நம் கோட்பாட்டையும் நாம் உறுதியான முறையில் அமைத்துக் கொண்டபின் கிடைக்கும் கல்வியை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஓர் ஆபரணத்தைப் போல், நம்மை அழகுபடுத்தவும் கூடும்.

ஆகையால், கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை.

நமது பழங்கால பள்ளிக்கூட முறையே போதுமானது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கே அதில் முதல் இடம்; அதுதான் (ஒழுக்கமே) ஆரம்பக்கல்வி. அந்த அடிப்படையின் மீது கட்டப்படும் கட்டிடம் நீடித்தும் இருக்கும்.

ஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுப்பது, நம்மை அடிமைப்படுத்திக் கொள்வதாகும். படிப்புக்கு மெக்காலே போட்ட அடித்தளம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது.அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும், பலன் அடிமை என்பதே. சுய ஆட்சியைப் பற்றி சுய மொழியில் பேசாமல் அந்நிய மொழியில் பேச வேண்டியுள்ளதுவருந்தத்தக்கதே.

ஐரோப்பியர்கள் வெறுத்துத் தள்ளிய முறைகளையே நாம் அனுசரிக்கிறோம். அவர்கள் உதறித்தள்ளி விட்ட முறைகளை எல்லாம் நாம், அறியாமையோடுபின்பற்றி வருகிறோம்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மொழிகளின் மதிப்பை உயர்த்த அந்நாட்டு அறிஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இங்கிலாந்தின் ஒருசிறிய பகுதியே வேல்ஸ். வேல்ஸ்காரர்களிடையே வேல்ஸ் மொழியறிவை திரும்பவும் உயிர்ப்பிக்க பெரு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள்வேல்ஸ் மொழியிலேயே பேசும்படி செய்வதற்கான இயக்கத்தில், லிபரல் கட்சியின் தலைவரும், பிரிட்டீஷின் பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீ லாயிட் ஜார்ஜ்முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.

ஆனால், நாம் ஒருவருக்கொருவர் தவறான ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறோம். நம் சிறந்த எண்ணங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே எடுத்துக்கூறப்படுகின்றன. நம் சிறந்த செய்திப் பத்திரிகைகள் ஆங்கிலத்திலேயே பிரசுரமாகின்றன. இதே நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிப்பதாயின், எதிர்காலம் நம்மைகண்டித்துச் சபிக்கும்.

ஆங்கிலக் கல்வியை பெற்றதால், நாட்டை நாம் அடிமைப்படுத்தி விட்டோம். நயவஞ்சகம் கொடுமை ஆகியன அதிகரித்து விட்டன. ஆங்கிலம்அறிந்த இந்தியர் மக்களை ஏமாற்றி, மிரட்டுவதற்குத் தயங்குவதேயில்லை. இப்போது நாம் மக்களுக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம்என்றால், அவர்களுக்குரிய கடனில், ஒரு சிறு பாகத்தை மாத்திரம் செலுத்தி வருகிறோம்.

நான் நீதிமன்றத்துக்கு போக வேண்டுமென்றால், அங்கே ஆங்கில மொழியையே உபயோகிக்க வேண்டும். நான் பாரிஸ்டர் ஆனதும், என் தாய்மொழியில் பேசமுடிவதில்லை. நான் கூறுவதை என் மொழியிலேயே கூற முடியாமல், இன்னொருவருக்காக மொழி பெயர்க்க வேண்டும் என்பது வெட்கக் கேடானது. இதுஅடிமைதனத்திற்கான அடையாளம்.

இதற்கு நான் ஆங்கிலத்தின் மீது எப்படி குற்றங்குறை கூற முடியும். ஆங்கிலம் அறிந்த இந்தியராகிய நாமே, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம்என்பதால், நாட்டின் சாபம் நம்மீதுதான் விழுமேயன்றி, ஆங்கிலத்தின் மீதன்று.

நாகரீகம் என்ற நோயினால் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டதால், ஆங்கிலப் படிப்பு இல்லாமல் நாம் முற்றிலும் இருந்து விடமுடியாது. அதுவரை ஆங்கிலஅறிவை பெற்றிருப்பவர்கள், ஆங்கில மக்களிடம் தொடர்பு கொள்வதற்கும், அவர்களது நாகரீகத்தைப் பற்றி அவர்கள் எவ்வளவு வெறுப்படைந்து இருக்கிறார்கள்என்பதை அறிவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்களுடைய குழந்தைகளுக்கு, தங்களது தாய்மொழி மூலம் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மற்றோர் இந்திய மொழியையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்தப்பின் ஆங்கிலம் தேவை என விரும்பினால், கற்றுக் கொள்ளட்டும். ஆனால், தேவையில்லை என்பதே முடிவானநோக்கமாக இருக்கட்டும்.

ஆங்கிலத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது என்பதையும் விட்டு விட வேண்டும். குறிப்பிட்ட அளவிற்கு ஆங்கிலம் கற்க வேண்டியிருந்தால், அதில் கூடகற்றுக் கொள்ள வேண்டியது என்ன, வேண்டாதது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் படிப்பையும், பட்டங்களையும் மதிப்பதை நாம் விட்டுவிட்டாலே ஆளுவோர் விழித்துக் கொள்வார்கள்.

நம் எல்லா மொழிகளையும் விருத்தி செய்ய வேண்டும். சிறந்த ஆங்கிலப் புத்தகங்களை பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். மந்திரங்களைகற்றுக் கொள்வதான நடிப்பை கைவிட்டு, ஒழுக்கம் சம்பந்தமான படிப்புக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

படித்த ஒவ்வொரு இந்தியரும், தம்தாய் மொழியுடன் இந்துவாக இருந்தால், சமஸ்கிருதத்தையும், இஸ்லாமியராக இருந்தால் அரபியையும்,பார்ஸியானால் பாரசீகத்தையும், எல்லோருமே இந்தியையும் கற்க வேண்டும். சில இந்துக்கள் அரபு, பாரசீக மொழிகளை அறிய வேண்டும். சிலஇஸ்லாமியரும், பார்ஸியரும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும்.

வட நாட்டினரும், மேற்கு பிரதேசத்தவர் பலரும் தமிழ் கற்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் இந்தியே பொது மொழியாய் இருப்பதோடு, அதை இஷ்டம்போல் பாரசிக அல்லது நாகரி லிபியில் எழுத வேண்டும்.

இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை முன்னிட்டு இவ்விரு லிபிகளையும் அறிந்திருப்பது அவசியம். இதை நாம் செய்யமுடிந்தால், ஆங்கிலத்தை சிறிது காலத்திலேயே விரட்டி விட முடியும்ஆங்கில அடிமைகளாகிய நமக்கு இவையெல்லாம் அவசியம்.

நமது அடிமைத்தனத்தினால் நாடே ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது. நாம் பெறும் சுதந்திரமே நாட்டின் சுதந்திரம்.

இந்தியா தெய்வத் தன்மையற்றதாக என்றுமே இராது. அசல் நாஸ்திகம் இந்நாட்டில் ஓங்காது. மதக்கல்வியைப் பற்றிச் சிந்திக்கும் போது எனக்குத் தலைசுற்றுகிறது.

நம் மத போதகர்கள், நயவஞ்சகர்களாகவும், சுய நலமிகளாகவும் இருக்கின்றனர் என்றே அவர்களை அணுக வேண்டியிருக்கிறது. முல்லாக்கள், தஸ்தூர்கள்,பிராமணர்களின் கையிலிருக்கிறது விசை. இவர்களுக்கு நல்ல புத்தி இல்லாமல் போகுமானால், ஆங்கிலப் படிப்பினால் நாம் பெற்றிருக்கும் சக்தியைமதப்படிப்புக்காக நாம் உபயோகிக்க வேண்டும். இது அதிகக் கஷ்டமானதன்று.

சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே அசுத்தமாகி இருக்கிறது. அந்தச் சிறு பகுதிக்குள் இருப்பனவற்றை மாத்திரமே சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தரகத்தை சேர்ந்த நாம் – நான் சொல்லுவது கோடிக்கணக்கானவர்களுக்குப் பொருந்தாது. ஆகையால் நம்மைக் கூட சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

பழமையாக இருந்த நிலையை இந்தியா அடையும்படி செய்வதற்கு நாமும் அதற்கு திரும்ப வேண்டும். நமக்குச் சொந்தமான நாகரீகத்தில் ஏற்றம்,தாழ்வு, சீர்திருத்தங்கள், விளைவுகள் ஆகியன இயற்கையாகவே இருக்கும். ஆனால், ஒரு முயற்சி தேவை. அதுதான், மேல்நாட்டு நாகரிகத்தைதுரத்துவது; மற்றவை எல்லாம் தொடர்ந்து தாமே வரும்.

* மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டு எழுதிய இந்தியத் தன்னாட்சி என்கிற நூலின் கல்வி என்கிற தலைப்பில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்பசுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர் வாரண்ட் பாலா.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book