மத்திய அரசு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கியதை எதிர்த்து, முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதிதொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அதார் அட்டையை எது ஒன்றுக்கும் கட்டாயமாக்க கேட்க கூடாது என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது.

ஆனாலும், எரிவாயு உருளையைப் பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயம் எனவும் இல்லையென்றால், எரிவாயு உருளை வழங்க இயலாது என்று எரிவாயுநிறுவனங்கள் நிர்பந்தப்படுத்துவதாக கூறி, ஒவ்வொருவரும் ஆதார் அட்டையைப் பெற முயற்சித்து வருகிறீர்கள்.

ஆதார் அட்டையைப் பெறுவதற்கு உங்களது பத்து விரல்களின் கைரேகைகளை பதிவு செய்து கொள்வதோடு, கண் விழிப்படலத்தையும்  எடுத்துக் கொள்வதாகஆதார் அட்டையை பெற்றவர்கள் சொல்கிறார்கள்.  

குற்றவாளிகளை அடையாளம் கானும் சட்டம் 1920 இன்படி, குற்றம் சாற்றப்பட்டவர்களை மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.

ஆம், இச்சட்டத்தின் பிரிவு 4 இன்படி, நீங்கள் புரிந்துள்ள குற்றம் ஒரு வருடத்திற்கு மேல் தண்டனை விதிக்கத்தக்கதாக இருக்கும் போதும், அக்குற்றம் தொடர்பாகபுலன் விசாரணை செய்ய தேவைப்படும் போதும் காவல்துறை எடுக்கலாம். இதனை நீங்கள் ஆட்சேபிக்கும் உரிமையும் உண்டு.

நீங்கள் ஆட்சேபித்தால் பிரிவு 5 இன்படி, நடுவரின் உத்தரவைப் பெற்றே எடுக்க முடியும். ஒருவேளை சுமத்தப்பட்ட குற்றச்சாற்றில் இருந்து விடுதலையானால்,எடுக்கப்பட்ட அசல் ரேகைகளை திரும்பப்பெறவும் முடியும்.

குறிப்பு: அடையாளம் கானுதல் என்பது நம் உருவத்தை ஒளிப்படம் பிடிப்பது அன்று. கை, கால்களின் அளவுகளை அளந்து கொள்ளுதல் மற்றும் ரேகைகளைபதிவு செய்து கொள்வதே ஆகும்.

இதனால்தான், ஒவ்வொருவரும் சட்ட விழிப்பறிவுணர்வை பெறுங்கள்  என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறேன்.

ஆதார் அட்டைக்கு எதிராக வழக்கு தொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி கூட, முக்கியமாக தெரிவிக்க வேண்டிய இந்த சட்ட சங்கதிகளை தெரிவிக்கவில்லை. சரி,உத்தரவு போட்ட இரண்டு நீதிபதிகளாவது இதை தெரிவித்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு தெரிந்திருந்தால்தானே தெரிவிப்பதற்கு!

ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு சொல்லும் காரணங்களில், முக்கியமானது பொது வினியோக குடும்ப அட்டைகளில் போலிகள்இருப்பதாக சொல்கிறது.

அப்படி இருந்தால், அந்த போலி அட்டையை வைத்திருப்பவர்கள் மீதும், அந்த அட்டையை வழங்கிய அரசு ஊழியர்கள் மீதுமே குற்றவியல் நடவடிக்கையைமேற்கொள்ள முடியுமே தவிர, நூற்று இருபது கோடி மக்களை குற்றவாளிகளாக ஆக்கமுடியாது.

நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள் இதையெல்லாம் எடுக்க அனுமதிக்கிறீர்கள் என்பதே என் கேள்வி

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நீதியைத் தேடி Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book